
இன்று காலை 6.15 மணிக்கு அவர்கள் கடலூர் வந்து சேர்ந்தார்கள். பாலகணேசும், சிவக்குமாரும் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் தங்குவதற்காக சென்றார்கள். வெங்கடேஷ் மட்டும் சின்னவாணியார் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் தங்குவதற்காக நடந்து சென்றார். கையில் நகை பையை வைத்திருந்தார். இதைநோட்டமிட்ட 2 மர்ம வாலிபர்கள் வேகமாக அங்கு வந்தனர். வெங்கடேஷ்மீது மிளகாய் பொடியைதூவினர். அவர் நிலைதடுமாறினார். அவர் கையில் இருந்த நகை பையை மர்ம வாலிபர் ஒருவன் பறிக்க முயன்றான். அவர் திருடன் திருடன் என்று கத்தினார். உடனே மர்ம வாலிபர் அவரை கத்தினால் குத்திவிடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டினான்.
வெங்கடேஷ் கையில் இருந்த நகை பையை பறித்தான். பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் சென்றுவிட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருப்பாபுலியூர் போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு பகலவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
கொள்ளையர்களை பிடிக்க கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த பகுதிகளில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment