click me

Wednesday, October 17, 2012

சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் ஏட்டை கொலை செய்ய முயன்ற 3 பேர் கோர்ட்டில் சரண்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜா. இவர் சிதம்பரம் வண்டிகேட் உமாபதி நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை ஏட்டு ராஜா விசாரித்தார். அதற்கு அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். உடனே தனது செல்போனில் அவர்கள் 3 பேரையும் படம் பிடித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குபதிவு செய்து ஏட்டு ராஜாவை தாக்கியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த, சிதம்பரத்தை சேர்ந்த ராம் (30), சுரேஷ் (25), சீர்காழியை சேர்ந்த கார்த்திகேயன் (30) ஆகியோர் நேற்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சரண் அடைந்தனர்.

இவர்கள் 3 பேரையும் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment