
சிதம்பரம்-26 மி.மீ. காட்டுமன்னார்கோவில்-53 மி.மீ. புவனகிரி-10 மி.மீ. சேத்தியாதோப்பு-15 மி.மீ. அணைக்கரை-21 மி.மீ. அண்ணாமலை நகர்-48 மி.மீ. பரங்கிப்பேட்டை-26 மி.மீ.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு 2 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் 53 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் இன்று காலை வரை 43.10 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வீராணம் ஏரி விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment