click me

Wednesday, October 24, 2012

கடைசி தொலைக்காட்சி விவாதம்:அமெரிக்க அதிபர் தேர்தல்


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் இடையிலான மூன்றாவதும் கடைசியானதுமான தொலைக்காட்சி விவாதத்தில் அதிபர் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரொம்னியும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் வாதிட்டுள்ளனர்.
ஒபாமாவுடன் ரோம்னிஉலகத்தின் தலைமைத்துவ நாடென்ற ஸ்தானத்தை அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிபர் ஒபாமா தவறிவிட்டார் என ரொம்னி குற்றம்சாட்டியுள்ளார்.மத்தியகிழக்கு பிரதேசம் நெருக்கடியில் மூழ்கிப்போக ஒபாமா இடம்தந்துவிட்டார் என ரொம்னி சாடினார்.
எதிர்த்து வாதாடிய ஒபாமா, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சம்பந்தமான முக்கிய விவகாரங்கள் அனைத்திலுமே ரொம்னியின் நிலைப்பாடு தவறு என்று கூறியுள்ளார்.
குறிப்பாக இராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்புக்கு ரொம்னி ஆதரவு வழங்கியது தவறுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்தொற்றுமை

இந்த விவாதத்தின் பல கட்டங்களில் இரு வேட்பாளர்களின் கொள்கைக்கும் இடையே பொதுப்படையான ஒரு ஒற்றுமை காணப்பட்டிருந்தது.
சிரியா தொடர்பிலும் ஆப்கானிஸ்தான் தொடர்பிலும் அமெரிக்காவின் கொள்கை பற்றிய இவ்விருவரது நிலைபாட்டையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
சீனாவின் வர்த்தக வழிமுறைகளை விமர்சிப்பதிலும், அதனால் அமெரிக்காவின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறுவதிலும் இவ்விரு வேட்பாளர்களும் ஒன்றுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment