
சிரியாவிலிருந்து அகதிகளாக சுமார் 100,000 பேர் அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிகளவான மக்கள் வந்ததால், அடிப்படை வசதிகளை செய்து தர துருக்கி திணறுகின்றது.
இதனையடுத்து ஜேர்மன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே தெரிவிக்கையில், சிரியா அகதிகள் ஐ.நாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருந்தால் புகலிடம் அளிக்க ஜேர்மன் தயாராக உள்ளது என்றார்.
மேலும், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அகதிகள் ஆதரவுக் குழுக்கள் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து திட்டமொன்றை உருவாக்க வேண்டும். அத்திட்டத்தை ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
ஐநாவின் கணிப்புப்படி சிரியாவின் உள்நாட்டுப் பிரச்னையால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியன் ஆகும். அண்டை நாடுகளின் தங்கியுள்ள பதிவு செய்த சிரியா அகதிகள் 348,000 பேர் ஆவர்.
No comments:
Post a Comment