click me

Monday, October 22, 2012

திவாலான கிங்பிஷர்: கவலையே இல்லாமல் ஊர் சுற்றும் விஜய் மல்லையா

கிங் பிஷர் விமான நிறுவனத்தின் உரிமங்கள் ரத்தாகியுள்ள நிலையிலும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருக்கிற போதிலும் அதைப்பற்றிய கவலையே இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார் விஜய் மல்லையா.
அவரது நிறுவனம் ரூ. 7000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கிறது. ஊழியர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கிறது.
ஆனால் இந்த கவலையே இல்லாமல் விஜய் மல்லைய்யா தென்கொரியாவில் நடைபெறும் கார் பந்தயத்தை காண சென்றுவிட்டாராம்.
இதற்கிடையே அவரது மகன் சித்தார்த் மல்லைய்யா, 2013ம் ஆண்டில் வெளியாகும் கிங் பிஷர் காலாண்டருக்காக இளம் பெண்களைத் தேடி லண்டன் சென்றுள்ளார்.
விரைவில் கிங் பிஷர் காலாண்டருக்கான இளம் பெண்களுடன் நாடு திரும்புவேன் என டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஏற்கனவே, சம்பளபாக்கியுள்ள கிங்பிஷர் ஊழியர் ஒருவர் புதுடெல்லியில் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment