click me

Wednesday, October 17, 2012

சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? தகவல் அளித்தால் ரூ.10 கோடி பரிசு

பாகிஸ்தானில் சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு, ரூ.10 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பள்ளி குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களை எதிர்த்தும் போராடிய மலாலா மீது, கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மலாலா நேற்று முன்தினம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது பாதுகாப்பு காரணங்களையொட்டி ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.
சிறுமி மலாலா, வீரத்தின் அடையாளம். அவருக்கு நாட்டின் மிக உயரிய வீரதீர விருதான சிதாரா- இ- சுஜாத் அளிக்கப்படும்.
சிறுமி மீது தாக்குதல் நடத்துவதற்காக 4 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் ஒருவனது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு உதவிய சிலரையும், அவர்களுக்கு பண உதவி செய்த ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மலாலா மீது தாக்குதல் நடத்தியது தாங்கள்தான் என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.
அவரையும், மலாலாவை சுட்ட தீவிரவாதிகள் குறித்தும் தகவல் தருபவர்களுக்கு ரூ,10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment