click me

Wednesday, October 17, 2012

1 மணி நேர மின்வெட்டு நாளை முதல் சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு: மின்சார வாரியம் அறிவிப்பு

நாளை முதல் சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு: மின்சார வாரியம் அறிவிப்புதமிழகத்திற்கு மின்சாரத் தேவை மொத்தம் 12,000 மெகாவாட். ஆனால், 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. சென்னையில் மட்டும் 1 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு அதிகமாக உள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டை போக்குவது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு தமிழகத்தில் மின்சார நிலை குறித்து வாரந்தோறும் முதலமைச்சருக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் 1 மணி நேர மின்வெட்டு, நாளை முதல் 2 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. ஒரு மணி நேர மின்வெட்டு, இரண்டு மணி நேரத்துக்கு உயர்த்தப் பட்டுள்ளது! இதற்காக தான் இந்த தமிழக அரசின் அறிவு ஜீவி அமைச்சர்கள் கூட்டம் போட்டு ஆலோசனை செய்தார்களா?! கேவலம்!!

    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: http://pnonazim.blogspot.com/

    ReplyDelete