click me

Monday, October 22, 2012

எதிர்வரும் டிசம்பர் மாதம் குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்

குவைத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
குவைத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான ஊழல் புகார்களை கூறி வந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நசீர் முகமது பதவி விலகினார். இருப்பினும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல மாதங்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.
இதையடுத்து 7ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரபு நாடுகளிலேயே குவைத் நாடாளுமன்றம் தான் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமாக உள்ளது.
குவைத் அரச குடும்பத்தினர் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்ற அமெரிக்க இராணுவம், ஈரானை ஒடுக்க குவைத்தை தன் படைத்தளமாகப் பயன்படுத்தி வருகிறது.
துபாய், தோகா போன்றவை பொருளாதாரத்தில் முன்னேறியவையாக உள்ளன. ஆனால் குவைத் இன்னும் முன்னேற்றமடையாமல் உள்ளதாக எதிர்க்கட்சியினர் கண்டித்து உள்ளனர்.

No comments:

Post a Comment