click me

Wednesday, October 17, 2012

யுரேனியம் வழங்குவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்டுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டு, வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை இன்று சந்தித்தார். வர்த்தகம், ராணுவம் குறித்த இருதரப்பு உறவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பிரச்சினை உள்ளிட்ட பன்னாட்டு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
 
யுரேனிய சப்ளை விவகாரம்: ஆஸ்திரேலிய பிரதமருக்கு இந்தியா நன்றிஇந்த சந்திப்பு குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:-
 
ஆஸ்திரேலியாவில் யுரேனியம் விற்பனை செய்வதில் நீண்ட காலமாக கடுமையான சட்டம் இருந்து வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில், அங்கு அரசியல் கட்சிகளிடையே பல்வேறு எதிர்ப்புகள் இருந்தும், அந்த கொள்கைகளை இந்தியாவிற்கு ஏற்றவாறு சாதகமானதாக மாற்றி அமைத்துள்ளது ஆஸ்திரேலியா.
 
இதனால் நமக்கு யுரேனியம் வழங்குவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்டுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் அணுமின்சாரத் தேவையின் அவசியத்தை அப்போது எடுத்துரைத்தேன். ஆஸ்திரேலியாவில் படித்துவரும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டு, ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் பன்னாட்டு பிரச்சினை குறித்து விவாதித்தார்.

No comments:

Post a Comment