click me

Thursday, October 18, 2012

யாழ்ப்பாணம்:இலங்கையில் போர் முடிவுக்கு பின் ராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் முதல் போராட்டம்

இலங்கையில் போர் முடிவுக்கு பின் ராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் முதல் போராட்டம்யாழ்ப்பாணம்,அக் 18-

இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு ராணுவத்துக்கு எதிராக மக்கள் வாய் திறக்கவே பயப்பட்டனர். ஆனால் இப்பபோது முதன் முதலாக ராணுவத்துக்கு எதிராக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இந்த போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. 

சமீபத்தில் நல்லூர் பஞ்சாயத்து தலைவர் வசந்தகுமார் ராணுவத்தால் தாக்கப்பட்டார். இதை கண்டித்தும், தமிழர் பகுதியில் இருந்து ராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. 

யாழ்ப்பாணம் பஸ் நிலையம் எதிரே நடந்த இந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். போராட்டத்தில் எம்.பி.க்கள் சரவண பவன், ஸ்ரீதரன், முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ராணுவமே எம் மண்ணை விட்டு வெளியேறு, மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே, எங்கள் உரிமை எங்களுக்க வேண்டும் ஆகிய உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தை சிங்கள உளவு துறையினர் எராளமானோர் கண்காணித்தனர் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ராணுவத்துக்கு எதிராக நடந்துள்ள முதல் போராட்டம் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

No comments:

Post a Comment