click me

Monday, October 29, 2012

குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறுவதாக எச்சரிக்கை;வானிலை மையம் தகவல்


வங்கக்கடலில் அந்தமான் அருகே 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. அது நேற்று காற்றழுத்த மண்டலமாக மாறியது. தற்போது இந்த காற்றழுத்த மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை- நாகப்பட்டினம் இடையே தென்கிழக்கு பகுதியில் இன்று காலை 600 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து தென்கிழக்கே 530 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருவதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
தமிழ்நாட்டின் உள்பகுதிகளிலும் கனமழை பெய்யலாம். தற்போது 42 கி.மீட்டர் முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் கடல் காற்ற வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கைப் படுகிறார்கள். 31-ந்தேதி நாகப்பட்டினத்திற்கும் நெல்லூருக்கும் இடையே இந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கலாம். புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது அதற்கான அறிகுறியில்லை.
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் தரங்கம்பாடியில் அதிகபட்டசமாக 13 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. காரைக்காலில் 11 செ.மீட்டரும், நன்னிலத்தில் 10 செ.மீட்டரும், கடலூர் மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் 7 செ.மீட்டரும், வேதாரண்யத்தில் 5 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment