இதன் வயிற்றுப்பகுதியில் ரத்தக்காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் இத்திமிங்கலம் 35 அடி நீளம், 40 அடி சுற்றளவில் 15 டன் எடையுடன் இருந்தது.
தோல் சேதமடைந்த நிலையில் ஒதுங்கிய திமிங்கலம் மன்னார் வளைகுடா கடலில் ஆழமான பகுதியில் சென்ற கப்பலில் அடிபட்டு அல்லது மாலுமிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
உயிரற்ற நிலையில் கடல் நீரோட்டத்தின் போக்கில் சென்றதால் வடகாடு கடல் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம் என இப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
கரை ஒதுங்கிய திமிங்கலம் சேதமடைந்து அழுகிய நிலையில் இருந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
|
No comments:
Post a Comment