click me

Wednesday, October 17, 2012

சவூதி அரேபியாவில் சவூதி பெண்கள் இனி நீதிமன்றங்களில் வாதாட அனுமதி

சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் சட்டத்தரனிகள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது.
சவூதி அரேபியா சட்டப்படி அந்நாட்டு பெண்கள் பொது இடங்களில் ஆண் துணையின்றி சுற்றுவது, கார் ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் சட்டத்தரனிகள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து அடுத்த மாதம் முதல் பெண் சட்டத்தரனிகள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமென சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment