click me

Monday, October 29, 2012

ஆந்திர கடலோர மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம்


ஹைதராபாத்: ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களில் இன்று முற்பகல் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆந்திராவின் பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கம்மம் மற்றும் நலகொண்டா மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஓங்கோல் மாவட்டம் குண்டலகம்மா பகுதியை மையம் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தின் ஹியாத்நகர் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment