பரங்கிப்பேட்டை, அக் 16: பரங்கிப்பேட்டையில் இன்று வரலாறு காணாத (16 மணி நேர) மின்வெட்டை கண்டித்து பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் சஞ்சிவிராயர் பகுதியில் பொதுமக்கள் திரண்டு தெருவில் பாய் போட்டு, கையில் மெழுகுர்வத்தி மற்றும் தீப்பந்தம் ஏந்தி தங்கள் எதிர்ப்பை காட்டினார்.
இந்த போராட்டத்தில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் செய்தியை சேகரிக்க சன் டிவி மற்றும் தமிழன் டிவி போன்ற பிரபலமான டிவிகளிலிருந்தும் வந்து செய்தி சேகரித்தனர்.
இந்த போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் மின்வெட்டால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.
நன்றி:tntjpno
No comments:
Post a Comment