இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுலவேசி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் லேசாக குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேத நிலவரங்கள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை
No comments:
Post a Comment