click me

Thursday, October 25, 2012

நகைச்சுவைக் கலைஞர் ஜஸ்பால் பட்டி விபத்தில் பலி


ஜஸ்பால் பட்டிஇந்தியாவின் மிகப் பிரபலமான நகைச்சுவைக் கலைஞர்களில் ஒருவரான ஜஸ்பால் பட்டி பஞ்சாபின் ஜலந்தர் மாநிலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 57.
பவர் கட் என்ற தனது புதிய படம் பற்றிய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வியாழனன்று மோகா நகரிலிருந்து ஜலந்தர் சென்ற பட்டியின் கார் மரமொன்றில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
1980களிலும் 90களிலும் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஜஸ்பால் பட்டி. ஃப்ளாப் ஷோ, உல்டா புல்டா போன்ற வெற்றிகர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவர் இவர்.
ஹிந்தி மற்றும் பஞ்சாபி படங்கள் பலவற்றிலும் இவர் தோன்றியுள்ளார்.
காரை ஓட்டிச்சென்ற ஜஸ்பாலின் மகன் ஜஸ்ராஜும், படத்தின் நாயகி சுரிளி கௌதமும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment