click me

Wednesday, October 24, 2012

பரங்கி பேட்டையில் 13 செ. மீ. மழை பெய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் நடுவே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு நகர்ந்து சென்றதால் தென் மாவட்டங்களில் ஓரளவு கனமழை பெய்தது. 

தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சோமாலியா அருகே நகர்ந்து சென்று விட்டது. அதாவது லட்சத்தீவு ஏரியாவில் இருந்து 950 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் காற்றில் உள்ள ஈரப்பதங்கள் தமிழ்நாட்டின் மேல் ஈர்க்கப்பட்டு வருவதால் நேற்றும், இன்றும் கனமழை பெய்கிறது. 

திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது ஓரிரு பகுதிகளில் மழை பெய்தது. திருவல்லிக்கேணி, சோழிங்கநல்லூர், பட்டினப் பாக்கம், தாம்பரம், அம்பத்தூர், மாதவரம், ராயபுரம், அண்ணாநகர், மதுரவாயல், குன்றத்தூர் பகுதிகளிலும் இரவில் ஓரளவு மழை பெய்துள்ளது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானில இயக்குனர் ரமணன் கூறியதாவது 

அடுத்த 48 மணிநேரத்துக்கு தமிழ் நாட்டில் பரவலாக  மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மழை பெய்யும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவப்போது மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிக பட்சமாக பரங்கி பேட்டையில் 13 செ. மீ. மழை பெய்திருக்கிறது. 


படங்கள் :mypno

No comments:

Post a Comment