கேரளா மாநிலம் பத்தினம் திட்டவைச் சேர்ந்த சகானா, திருமணம் மூலமாக சினிமா உதவி இயக்குனர் உட்பட 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதன் காரணமாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட சகானா நேற்று சென்னை கொண்டு வரப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், ஆடம்பர வாழ்க்கைக்காகவே 4 பேரையும் திருமணம் செய்து ஏமாற்றினேன் என்று ஒப்புக்கொண்டார்.
தற்போது புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகானா மீது, மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். |
No comments:
Post a Comment