இதையடுத்து புனே குற்றப்பிரிவு பொலிஸார் விரைந்து சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அந்த ஹோட்டலில் ஏராளமான இளம் பெண்களும், வாலிபர்களும் போதையில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து போதை விருந்தில் கலந்து கொண்ட 20, 25 வயதுடைய 325 பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களில் 114 இளம் பெண்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பெரும்பாலானோர் மாணவ- மாணவிகள் என்றும் சிலர் ஹிஞ்சேவாடி பகுதியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்து வருபவர்கள் எனவும் தெரிய வந்தது.
கைதான 325 பேரையும் சாசூன் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலும், மும்பை பொலிஸ் சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துதல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல ஹோட்டல் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். |
No comments:
Post a Comment