தமிழ்நாட்டில் திருவாரூர் என்ற மாவட்டத்தில் மன்னார்குடி இரயில் நிலையம் எதிரே உள்ள பிளாட்பாரத்தில் நரிக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உட்பட பலர் இரவு நேரத்தில் தூங்குவது வழக்கம்.
இதே போல் நேற்று இரவும் இங்கு ஏராளமானோர் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவ்வழியாக மண் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 13, 8, 4 வயது சிறுவர்களும் அடங்குவர்.
இவ்விபத்து குறித்து அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்தனர்.
படுகாயமடைந்த மற்றவர்களை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். |
No comments:
Post a Comment