click me

Tuesday, September 4, 2012

புது தில்லி, செப். 20ம் தேதி கூடுகிறது காவிரி நதி நீர் ஆணையம் : பவன்குமார் பன்சால்


புது தில்லி, செப்., 04 : காவிரி ஆற்றில், தமிழகத்தக்கு உரிய நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்படும் என்று கூறிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், பிரதமரை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், காவிரி நதி நீர் ஆணையத்தை செப்டம்பர் 20ம் தேதி டெல்லியில் உள்ள பிரதமரில் இல்லத்தில் கூட்ட பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று பன்சால் கூறினார்.
இக்கூட்டத்தில் தமிழக, கேரள, கர்நாடக, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment