click me

Tuesday, September 4, 2012

பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வென்று அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது.


அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டியில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஷார்ஷாவில் நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான மொகமது ஹபிஸ் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ஓட்டங்களும், நசிர் ஜாம்ஷெட் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆசாத் ஷாபிக், அசார் அலி ஆகியோர் தலா 27 ஓட்டங்களும், அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் எடுத்தது. பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 245 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மைக் ஹஸ்சி 65 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களும், டேவிட் ஹஸ்சி 43 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டநாயகனாக மைக் ஹஸ்சி தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக மிச்செல் ஸ்டார்க் தெரிவானார்.

No comments:

Post a Comment