click me

Saturday, September 1, 2012

பரங்கிப்பேட்டை அருகே காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்த வாலிபர் சாவு

பரங்கிப்பேட்டை அருகே காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்த வாலிபர் சாவுபரங்கிப்பேட்டையை அடுத்த கே.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 25). இவருக்கும், பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 
 
காதல் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்தனர். அதையடுத்து கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி பரங்கிப்பேட்டை அருகே உள்ள சுடுகாட்டில் 2 பேரும் விஷம் குடித்தனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த காதல் ஜோடியை அந்த பகுதியினர் மீட்டனர். பிறகு 2 பேரும் சிகிச்சைக்காக தனித்தனியே வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
 

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்ற பார்த்தசாரதியின் காதலி குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு பார்த்தசாரதி இறந்தார். 

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment