சென்னை பட்டிகப்பாக்கத்தில் உள்ள சீனுவாசபுரத்தில் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 50 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் கூலித் தொழிலாளி ஒருவரும் பலியானார்.
இந்த தீ விபத்துக்கு காரணம் எதுவும் தெரியவில்லை என்றும் விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் கடந்த 36 மணி நேரத்துக்கு முன்புதான் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குடிசைக்கு ரூ. 5 ஆயிரம் தருவதாகக் கூறப்பட்டதாகவும் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் இந்த தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் பொதுமக்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.
தாங்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். |
No comments:
Post a Comment