click me

Sunday, November 11, 2012

மியான்மரில் நிலநடுக்கம்


மியான்மரில் வடக்கு பகுதியில் இன்று காலை 7.42 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மியான்மரின் 2-வது பெரிய நகரமான மண்டாலேயில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே,  பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே  இங்கு 6.6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் மையம் அறிவித்தது. மண்டாலே நகரின் வட பகுதியில் 117 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர்  ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கம்  பக்கத்து நாடான தாய்லாந்து தலை நகரம் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் ஓ.பாமா மியான்மர் வர உள்ளார். அதற்குள் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ராணுவ  ஆட்சி நடந்த மியான்மரில் அமெரிக்க அதிபர்களில் ஒபாமாதான் முதன் முதலாக வருகை தர உள்ளார்.

No comments:

Post a Comment