click me

Wednesday, November 7, 2012

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் உருவான நீலம் புயல் கடந்த 31-ம் தேதி சென்னை அருகே கரை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பின்னர் அந்த புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களை நோக்கி சென்றதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலம் புயல் கரை கடந்த பிறகு 2 தினங்களாக வானிலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வங்க கடலில் இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. 

No comments:

Post a Comment