
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அல் மந்தாரா கிராமம் அருகே லெவல் கிராசிங் உள்ளது.
இன்று காலை அந்த இடத்தை பள்ளி பேருந்து ஒன்று கடக்க முயன்ற போது, மின்னல் வேகத்தில் வந்த ரயில் திடீரென மோதியது.
இந்த கோர விபத்தில் 47 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து நடந்த சாலையில் துண்டு துண்டாக சிதைந்து கிடந்த குழந்தைகளின் உடல் பாகங்களை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தனர்.
இந்த குழந்தைகள் அனைவரும் 4 வயது முதல் 6 வயது வரை உள்ளவர்கள் ஆவர். மதப் பள்ளியில் படித்து வரும் இவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யும்படி ஜனாதிபதி முகமது முர்சி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே விபத்திற்கு முழுப் பொறுப்பேற்றுள்ள அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் ரஷாத் அல்-மெடினி தனது பதவியை ராஜினாமா செய்தார். ரெயில்வேத் துறை தலைவர் முஸ்தபா கெனாவியும் பதவி விலகினார்.





No comments:
Post a Comment