click me

Saturday, November 3, 2012

அபுதாபியில் கேரளா டாக்டர் கொலை

அபுதாபியில் கேரளா டாக்டர் கொலை: பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் கைது
அபுதாபி, நவ. 4-

அபுதாபியில் இயங்கிவரும் அல் அலி மருத்துவமனையில் நீண்ட கத்தியுடன் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் உள்ளே புகுந்திருக்கிறான். வழியிலேயே நர்சுகள் தடுத்தும், அவன் யூராலஜி பிரிவிற்குள் நுழைந்திருக்கிறான். பின்னர் அங்கிருந்த கேராளாவை சேர்ந்த டாக்டர் ராஜன் டேனியல் என்பவரை ஆட்டை வெட்டுவது போல் அந்த பெரிய கத்தியால் வெட்டியிருக்கிறான்.

பின்னர் அவரை அவனது காலில் மண்டியிட மிரட்டி அவருடைய கழுத்தை அறுத்து கொன்று இருக்கிறான். ஆனால் அங்கு வேலைபார்த்த மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் தாமதமாக வந்து இருக்கிறார்கள். பிறகு காவலர்கள் வந்து கைது செய்யும் வரை அவன் அங்கேயே இருந்து இருக்கிறான். தனது உறவினர் ஒருவரின் சாவுக்கு காரணமாக இருந்த அவரை வெட்டிக்கொன்றதாக கோபத்துடன் அவன் கூறியிருக்கிறான்.

இது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment