click me

Saturday, November 24, 2012

சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 14 பேர் பலி

சீனாவில் உணவு விடுதியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஷாங்சி மாகாணத்தில் உள்ள இந்த உணவு விடுதியில் மக்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரம் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்துக்கு காஸ் கசிவே காரணம் என கூறப்படுகிறது.
விபத்து நிகழ்ந்த போது சம்பவ இடத்திலேயே 6 பேரும், மருத்துவமனையில் 8 பேரும் பலியானார்கள்.
47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து காரணமாக உணவு விடுதியின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது.

No comments:

Post a Comment