
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட்.
இந்நாட்டின் பிரதான நகரமான அபித்ஜானில் உள்ள பெலிக்ஸ் ஹூப்பட் போய்னி மைதானத்தில் நேற்றிரவு புத்தாண்டு விழா நடைபெற்றது. வண்ண வண்ண வாணவேடிக்கையைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது வெளியில் இருந்த ஏராளமானோர், மைதானத்திற்குள் செல்வதற்காக முண்டியடித்து முன்னேறினர்.
ஒருவரையொருவர் தள்ளி விட்டு சென்றதால் பலர் கீழே விழுந்தனர், பின்னால் வந்தவர்களும் அடுத்தடுத்து தடுக்கி விழுந்தனர்.
இந்த நெரிசலில் சிக்கி சுமார் 60 பேர் பலியானதாகவும், 200 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment