click me

Monday, August 27, 2012

உலகளவில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நகரங்களாக மெல்போர்ன்(97.5) முதலிடத்தையும்

உலகளவில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நகரங்களாக கனடாவின் வான்கூவர், டொரொண்டோ, கேல்கரி போன்ற நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் சிறந்த நகரங்களைத் தெரிவு செய்வதற்காக சுமார் 140 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் சுகாதாரம், நிலைத்தன்மை, பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற காரணிகளைக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
இந்த ஆய்வில் கனடாவில் வான்கூவர் 100க்கு 97.3 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது. டொரொண்டோ நான்காவது இடத்தையும்(97.2) கேல்கரியும், அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டும் (96.6) ஐந்தாவது இடத்தையும் பெற்றன.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்(97.5) முதலிடத்தையும், ஆஸ்திரியாவின் வியன்னா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த ஆய்வில் மக்கள் வாழவும், மக்கள் விரும்பி வந்து பார்க்கவும் விரும்பிய நகரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல நகரங்களில் மதிப்பெண் குறைந்ததற்கு போர், கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவையும் காரணங்களாயின. லிபியாவின் உள்நாட்டுப் போர், கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவை அந்த நாடுகளில் உள்ள நகரங்களின் மதிப்பெண்களை குறைத்தன.
இந்த ஆய்வில் கடைசி இடத்தைப் பிடித்தது பங்களாதேஷின் தாக்கா(38.7) நகரமாகும். இத்தகவலை The Economist பத்திரிகை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment