க்யூரியாசிட்டி அனுப்பிய குரல் பதிவு
வாஷிங்டன், ஆக., 28 : செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலத்துக்கு, நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து அனுப்பிய குரல் பதிவு சென்று சேர்ந்தது. அதனை க்யூரியாசிட்டி அங்கு ஒலித்தது. செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல் ஒலிப்பதை பதிவு செய்து க்யூரியாசிட்டி மீண்டும் பூமிக்கு அனுப்பியது.
நாசாவின் செய்தித் தொடர்பாளர் சார்லஸ் போல்டன் கூறுகையில், நிலாவைத் தவிர, அடுத்த ஒரு கிரகத்தில் இருந்து மனிதக் குரல் ஒலிப்பது இதுவே முதல் முறை என்று பெருமையாகக் கூறினார்.
No comments:
Post a Comment