பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள சவூதி அரேபிய அணியைப் பார்க்கும் போது திருடர்கள் போலத் தெரிகின்றனர் என ஸ்காட்லாந்தை சேர்ந்த நகைச்சுவை நடிகர் பிராங்கி பாயில் தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டனில் பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது.
இது குறித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த நகைச்சவை நடிகர் பிராங்கி பாயில் டிவிட்டரில் சில விஷமத்தனமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சவூதி அரேபிய அணியைப் பார்க்கும் போது அவர்களில் பலரும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அதாவது கை ஊனமுற்றோரைப் பார்த்துத் தான் இவ்வாறு பேசியுள்ளார் பிராங்கி. திருட்டுத்தனம் செய்து அதற்குத் தண்டனையாக கைகளை வெட்டி தண்டனை கொடுத்துள்ளதைப் போல அவர்கள் இருக்கிறார்களாம். இதன் மூலம் சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனைகளை கொடுப்பதை சுட்டிக் காட்டுகிறாராம்.
இவரின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஊனமுற்றோரையும், சவூதி அரேபிய சட்டத்தையும் இவர் அவமதித்துள்ளார், இழிவுபடுத்தியுள்ளார் என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பிராங்கியைக் கடுமையாக கண்டித்து பலரும் டிவிட்டரில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment