சிதம்பரம், ஆக.23: சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு மத்திய ஒருங்கிணைப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும், தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.132 தினக்கூலி வழங்க வேண்டும், கடு்ம் வறட்சியினால் வேலையில்லாமல் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காந்திசிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உதவிஆட்சியர் அலுவலகத்தை அடைந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ராஜேந்திரன், செல்லையா, காளி.கோவிந்தராசு, ராமு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் கற்பனைச்செல்வம், துரைராஜ், கலியபெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் சிவலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் வாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
No comments:
Post a Comment