கடலூர் ; பள்ளியில் கால்பந்து விளையாடிய போது அடிபட்டு மாணவன் பலி
ஆக., 29 : கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி அருகே விழப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி முருகனின் மகன் பரதன் பள்ளி விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் இன்று காலை கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பரதனின் முகத்தில் பந்து விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் கடலூர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment