
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், சமீபத்தில் 30 வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இங்கு, 14வது பாராலிம்பிக் போட்டி இன்று துவங்கி, செப்., 9 வரை நடக்கவுள்ளது. இதில் 166 நாடுகளைச் சேர்ந்த 4,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
பிஸ்டோரியஸ் நம்பிக்கை:
ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன், செயற்கை கால் பொருத்திய தென் ஆப்ரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பங்கேற்றார். 400 மற்றும் 4*400 மீ., ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய இவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதற்கு பரிகாரம் தேடும் வகையில் பாராலிம்பிக்கில் திறமை நிரூபிக்க உள்ளார். பீஜிங் பாராலிம்பிக்கில் (2008), 100 மீ., (டி 44), 400 மீ., (டி 44) ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். “பிளேடு ரன்னர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இவர், லண்டனில் அசத்துவார் என்று நம்பப்படுகிறது.
இந்தியா பங்கேற்பு:
இந்தியா சார்பில் இம்முறை 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். கிரிஷா (உயரம் தாண்டுதல்), ஜக்சீர் சிங் (நீளம் தாண்டுதல்), நரேந்தர் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப், அமித் குமார் (வட்டு எறிதல்), சரத் எம் கயாவத் (நீச்சல், 100 மீ., “பிரீஸ்டைல்’, 100 மீ., “பிரஸ்ட்ஸ்டிரோக்’, 200 மீ., தனிநபர் மெட்லே, 100 மீ., “பட்டர்பிளை’), நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்) மற்றும் வலுதூக்குதலில் பார்மன் பாஷா (48 கி.கி.,), ரஜிந்தர் சிங் (67.5 கி.கி.,), சச்சின் சவுத்ஹரி (82.5 கி.கி.,) ஆகியோர் பதக்கம் வெல்ல போராடலாம்.
No comments:
Post a Comment