காதர் பாட்ஷா என்ற வெள்ளைச்சாமி 70, தமிழ்நாட்டின் கமுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இன்று காலை அவரது வீட்டிற்கு தனஞ்செயன் என்ற நபர் வந்தார்.
இவர் தன்னிடமிருந்த அரிவாளை எடுத்து காதர் பாட்ஷாவை சரமாரியாக வெட்டி சாய்த்தார். வீட்டிற்குள்ளேயே இந்த சம்பவம் நிகழ்ந்தமையால் காதர் பாட்ஷாவின் குடும்பம் சப்தமிட்டார்கள்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கொலையாளி தனஞ்செயனை பிடித்து அடித்து உதைத்தனர். இவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்த தீவிர விசாரணையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. |
No comments:
Post a Comment