கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு நிலம்: முதல்வர் உத்தரவு தஞ்சாவூரில்
சென்னை, ஆக.26: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கல்லூரிக்காக, முத்தம்மாள்புரம் கிராமம் மேலத்தோட்டம், கீழத்தோட்டத்தில் உள்ள 160.93 ஏக்கர் மற்றும் முத்தம்மாள்புரம் சத்திரம் நிர்வாகத்துக்குச் சொந்தமான 16.99 ஏக்கர் என மொத்தம் 177.92 ஏக்கர் நிலங்களை நிலக்கிரயமின்றி நில உரிமை மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment