நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு
புது தில்லி, ஆக., 27 : நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 5வது நாளாக முடங்கியுள்ளன.
காலையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து மதியம்12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment