click me

Wednesday, August 29, 2012

திண்டுக்கல் : கார் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற மாருதி கார் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகி உள்ளனர். திண்டுக்கலில் இருந்து கரூர் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில், நல்லமணார்கோட்டை கிராசிங் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மாருதி கார் கடந்து ‌கொண்டிருந்தது. வேகமாக வந்த ரயில், மாருதி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த சரண்யா(30) மற்றும் முருகேசன் (40) சம்பவ இடத்திலேயே பலியாயினர். மனோகரன் (35), அவரது குழந்தை ஹசிகாஸ்ரீ (1) படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ‌மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment