click me

Wednesday, August 29, 2012

விளையாட்டு வீரர்களுக்கான விருதுளை இன்று ஜனாதிபதி வழங்குகிறார்

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பட்டியல் ஏற்கனவே மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு விட்டது.
இதன்படி விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜய்குமார், யோகேஷ்வர்தத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாராட்டுசான்றிதழுடன், ரூ.7.5 லட்சம் பரிசும் கிடைக்கும்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உட்பட 25 வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெறுகிறார்கள். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் தலா ரூ.5 லட்சம் அளிக்கப்படும். இது தவிர 8 பயிற்சியாளர்கள் துரோணாச்சார்யா விருதுக்கும் தெரிவாகி உள்ளனர்.
விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மேற்கண்ட விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

No comments:

Post a Comment