வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வந்த புரளி எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்கள் மூலமாக புரளிகள் பரவியதை அடுத்து செல்போன்களில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக வெறும் 5 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்பும் வகையில் தடை செய்யப்பட்டது.
இந்த தடையால் பொதுமக்களும், தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும், வடகிழக்கு மாநில மக்கள் தென்னிந்திய நகரங்களில் இருந்து செல்வது குறைந்து, மீண்டும் அவர்கள் ஊர்களில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு வருவது ஆரம்பித்திருப்பதால், ப்ரீப்பெய்ட் செல்போன்களில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான தடையில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment