நடக்கும்போது சுயமாகவே சார்ஜ் ஆகும் மின்கலங்களைக் கண்டுபிடித்து மின்கல உற்பத்தியில் மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது Georgia Tech ஆய்வு நிறுவனம்.
இலிதியம் அயன்களைக் கொண்டு விசேட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இம்மின்கலங்கள் அவற்றை இணைப்பதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள காலணி ஒன்றின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டு இவ்வாறு சுயமாக சார்ஜ் செய்யப்படுகின்றது.
தற்போது நாணயங்களின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சுயமாக சார்ஜ் ஆகும் மின்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் விரைவில் இவ்வாறான தொழில்நுட்பத்தில் அமைந்த கைப்பேசிகளுக்குரிய மின்கலங்களும் கண்டுபிடிக்கப்படும் என குறித்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment