நூற்றுக்கணக்கான இணையதளங்கள் முடக்கம்
புது தில்லி, ஆக., 20 : வடமாநில இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புரளி வந்ததை அடுத்து தென்னிந்திய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
புரளி பரவுவதை தடுக்கும் வகையில் எஸ்எம்எஸ்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், போலியான புகைப்படம், சர்ச்சைக்குரிய தகவல்களைக் கொண்டுள்ள இணைதளங்களையும் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment