
மியான்மரில் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.
ரகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் வங்கதேசத்திலிருந்து குடி பெயர்ந்த எட்டு லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர்.
சட்ட விரோதமாகக் குடி பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் 50 பேர் பலியாகினர்.
இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ரகின் மாகாண முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி மியான்மர் அரசை வற்புறுத்தியிருந்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் அடைக்கலம் கிடைக்காத 2 லட்சம் ரகின் மாகாண முஸ்லிம்கள் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கராச்சியில் உள்ள குடிசை பகுதிகளில் இவர்கள் தங்கியுள்ளனர்.





No comments:
Post a Comment