click me

Saturday, August 25, 2012

புதிய மேம்பாலம் : அண்ணா ஆர்ச் இடிக்கப்படுகிறது

சென்னை, ஆக., 25 : அண்ணா நகரில் இருந்து பூந்தமல்லி சாலையை இணைக்கும் முக்கியச் சாலையில் அமைக்கப்பட உள்ள 2 புதிய மேம்பாலப் பணிக்காக அப்பகுதியில் உள்ள சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா ஆர்ச் இடிக்கப்பட உள்ளது.

27 ஆண்டுகள் பழமையான அண்ணா ஆர்ச், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 75வது பிறந்த நாளையொட்டி கட்டப்பட்டது. வரும் திங்கட்கிழமையன்று இரவு அண்ணா ஆர்ச்சை இடிக்கும் பணி துவங்கி இரண்டு நாளில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment