click me

Thursday, August 23, 2012

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி


ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 
வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்துடன் இன்று மோதியது. இப்போடியில் முதலில் ஆடிய இந்திய அணி 209 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர் அபரஜித் அதிகபட்மாக 44 ரன்கள் அடித்தார்.
 
அதன்பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த அணியின் பிளெட்சர் சிறப்பாக ஆடி 53 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் குறிப்பிடும்படி ஆடாததால், நியூசிலாந்து அணியின் ரன்வேகம் தடைபட்டது.
 
கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை வீசிய சந்தீப் ஷர்மா சிறப்பாக பந்துவீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 200 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
 
இதனால் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போடிக்கும் முன்னேறியுள்ளது. 44 ரன்கள் விளாசியதுடன், ஒரு விக்கெட் வீழ்த்திய அபரஜித் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
 
நான்காவது முறையாக உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, நாளை மறுதினம் நடக்க உள்ள இறுதிப்போட்டியில்  ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

No comments:

Post a Comment