click me

Friday, August 31, 2012

இன்று முழு நிலவு நாள் 'நீல நிலவை'க் காணத் தவறாதீர்கள்!


டெல்லி: இன்று முழு நிலவு நாள். இன்றைய தினம் இரவில் வானத்தைப் பார்த்தால் ஒரு ஆச்சரியம் உங்களுக்குக் காத்திருக்கும். அதாவது இன்றைய இரவு தோன்றும் நிலாவுக்கு ப்ளூ மூன் என்று பெயர்.
இப்படி 'நீல நிலவாக' நமது சந்திரன் காட்சி தருவது என்பது அரிதான ஒரு விஷயம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட நீல நிலவைக் காண முடியும்.
வழக்கமாக வருடத்திற்கு 12 முறை பவுர்ணமி வருவது வழக்கம். சில சமயம் 13 பவுர்ணமி வரும். அப்படிப்பட்ட சமயத்தில், வரும் நிலவுக்குத்தான் நீல நிலவு என்று பெயர்.
அப்படியானால் நிலா நீல நிறமாக காட்சி தருமா என்று கேட்கலாம். அப்படி இல்லை. வழக்கம் போலத்தான் இருக்கும். இருப்பினும் சில சமயங்களில் வளி மண்டலத்தின் பரவிக் கிடக்கும் தூசு மண்டலம் காரணமாக நிலவின் நிறம் லேசான நீல நிறத்தில் இருப்பது போலத் தோன்றும். மற்றபடி வழக்கம் போலத்தான் இந்த முழு நிலவும் வெண்மையாக இருக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் முழு நிலவுக்கு வானியல் நிபுணர்கள் ஒரு பெயர் வைத்துள்ளனர். அதன்படி 12 முழு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. அதேசமயம், 13வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் எந்த மாதத்தில் 2 முறை முழு நிலவு வருகிறதோ அப்போது இந்த ப்ளூ மூன் வரும்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதிதான் ஒரு முழு நிலவு வந்தது. இன்று 2வது முழு நிலவு என்பதால் இதை ப்ளூ மூன் என்கிறோம்.
இன்றைக்கு விட்டால், அடுத்து 2015ம் ஆண்டு ஜூலை மாதம்தான் ப்ளூ மூன் வருகிறதாம். எனவே இன்றைய இரவை மறக்காமல் விசேஷமாக்குங்கள்....



No comments:

Post a Comment